அழகே உன்னை பார்த்தே
அசைந்தே நானும் போனேன்
இதழே ஈர இதழே
ஐயையோ நானும் சாய்ந்தேனே
சீ போடி உன் முகம் கோடி
நிலவென மின்னும் அப்படி மின்னும்
உன்னை ஊட்டி கொள்ளவும் உரசி கொள்ளவும்
ஏங்கும் என் மனம் ஏங்கும்
நீ போகும் பாதையில் உன்னை தொடர்வேன்
சாலை எங்கிலும் தூசாய் கொஞ்சம்
கொஞ்சலாய் என்னை கொள்வாயா
ஓஹோ ஊஞ்சலாய் நெஞ்ஜோரதிலே
சாயங்காலத்திலே ஆடினாய்
மஞ்சளாய் தூவானதிலே நீதானே தெரிந்தாய்
ஓஹோ ஊஞ்சலாய் நெஞ்ஜோரதிலே
சாயங்காலத்திலே ஆடினாய்
மஞ்சளாய் தூவானதிலே நீதானே தெரிந்தாய்
ஓ எனக்கென தனியாய் நடை பாதை
அதில் என்னை என் நிழலாய் பின்தொடர்ந்தாய்
ஓர் உறவின்றி தவித்திடும் உலகத்திலே
எனக்காக ஏங்கும் புது உறவும் நீயா
அடி என எனக்கென்ன ஆச்சு
தலைகீழாய் நாட்களும் போச்சு
கடைசி பேருந்துக்காக நிற்கும் பயணி நான்தானோ
இனம் புரிய இன்பம் துன்பம் ரெண்டும் ஒன்றாய்
எந்தன் நெஞ்சில் ஏனோ தானோ என்றே ஆநேன்னடி
ஒரு முத்தத்தாலே எனை தித்திதாலே
இமை ஓரதாலே வீசி வீசி போகிறாய்
எல்லாம் மாறி போச்சு
அட ஏதோ புதுசா ஆச்சு
இதை வெளியே சொல்ல தெரியாதம்மா
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ நீ யாரடி உள்ளே கல்லையும்
வெளியே பூவையும் வீசினாய்
போங்கடி கொண்டாட்டத்திலே ரெண்டாய் நிர்க்கிறேனே
நீ நீ யாரடி உள்ளே கல்லையும்
வெளியே பூவையும் வீசினாய்
போங்கடி கொண்டாட்டத்திலே ரெண்டாய் நிர்க்கிறேனே