இன்னும் என்ன அழகே உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா
சின்ன சின்ன புன்னகை அடி இது போதும்
உண்மையாய் உன்னில் நான் இல்லையா
தனித்து நீ இல்லையே நானும்
உன் கூடவே வெளியில் சொல்லாத சொந்தங்களே
உனக்கும் என்றாவது என்மேல் காதல் வரும்
அதை நான் பார்ப்பேன் உன் கண்ணிலே
தினம் தினம் எந்தன் நடை பாதை ஓரம்
வருகிறாய் நடக்கிறாய் என்னோடு
திடுக்கென மறைந்தே நீ
எங்கோ சென்றாய் மீண்டும் உன்னோடு
கை சேர்க்க விரல் எல்லாம் அலைபாய
இன்னும் என்ன அழகே இன்னும் என்ன அழகே
இன்னும் என்ன அழகே உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா
இன்னும் என்ன அழகே