திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
தொலை தொலை என எனை நானே கேட்டு கொண்டேனே..
என் மமதையினை..
நுழை நுழை உன்னை என, நானே மாற்றிகொண்டேனே..
என் சரியதனை..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
முகத்தினை திருடினாய் திரை கதை படி
அகத்திணை வருடினாய் அதை கடை பிடி..
பெண்ணே உன்னை துறவி என்றுதான்
இந்நாள் வரை குழம்பி போயினேன்..
துறவரம்.. துறக்கிறேன்..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
உரிமைகள் வழங்கினேன் உடை வரை தொடு..
மரங்குகள் மீறியே மடை உடைதிடு..
ஓராயிரம் இரவில் சேர்த்ததை..
ஒரே நொடி இரவில் கேட்கிறாய்..
பொறுமையின்.. சிகரமே..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
சொட்டு சொட்டாக உன் பார்வை என்னுள் இறங்க..
பட்டு பட்டாக.. என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க..
திட்டு திட்டாக உன் காதல் என்மேல் படிய..
செட்டு செட்'டாக ஒரு முத்திலே முடிய..