ஆயிரம் ஆயிரம் கோவில்களைவிட ஆத்தா மேலடா
நபிகள் நாயகம் சொர்க்கம் என்றது தாயின் காலடா
கோவில் கருவறையில் சிற்பத்திற்க்கு
பாலாபிஷேகம் செய்வார்கள் தாயோ கருவறையை விட்டு
வெளியில் வைத்தும் பாலாபிஷேகம் செய்வாளே
ஆண்டவன் கூட படைப்பான் காப்பான் அழிப்பானே
நல்ல தாயோ படைப்பாள் காப்பாள் அழிக்க மறுப்பாளே
காலை மாலை உழைக்கும் உழைப்பு ஆளையே மாத்துதடா
உள்ளமும் குன்றி உழைத்த உழைப்பு உயரே சேர்க்குதடா
பூத்தது வேர்வை மட்டும் அல்ல வெற்றியும் பூத்ததடா
ஒத்த ரூபா துட்டு பணக்கட்டுகள் சேர்க்குதடா
வேலைவாய்ப்பு நிலையம் எதற்கு
வேலை உந்தன் மனதிலிருக்கு
கண்கள் தன்னில் கடவுள் இருக்கு
தாயை வணங்கி வேலை துவக்கு
திருமணத்தில் இருவரிணைந்து மூவர் ஆவாரே
நட்பினிலே மூவர் இணைந்து ஒருவர் ஆவாரே
பல தாயின் கருவறை குழந்தைகளாய் இருந்தோம்
ஒரே தாயின் கருவறையில் உட்கார்ந்திருந்தோம்
அதுதான் அதுதான் கல்லூரி
ஆண்டவன் கொடுத்த முகவரி
தலைமுடிகள் அத்தனையே தர்மங்கள் செய்வோம் அத்தனை
வேர்வை துளிகள் எத்தனையோ
வெற்றிகள் சேரும் அத்தனை