நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு பா பா
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு பா பா
நீ கவிதை எனக்கு நான் ரசிகன் உனக்கு பாபா
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு பாபா
உடல் முழுக்க நனைக்கும் மழையே
நகம் எடுத்து சிவக்கும் கலையே
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதலிரவே
உடை அணிந்து உருளும் நிலவே
தடை கடந்து திரளும் அலையே
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே
( நீ கவிதை எனக்கு )
சத்தம் போடும் உந்தன் வளையல்
காலை வரைக்கும் வேண்டாமே
ஆ குத்தும் சின்ன முக்குத்தியும் இனிமேல்
தேவை இல்லை தானோ
கூந்தல் அதில் சிக்கிமாட்டிக்கொள்வதால்
கம்மல் கூட வேண்டாமா
இன்னும் கையில் இடஞ்சல்கள் செய்யுதே மோதிரங்கள் ஏனோ
ஒட்டிக்கொண்டு ஊஞ்சலாடும் இந்தப் பொன் வேளையில்
( நீ கவிதை எனக்கு )
ஒட்டியாணம் தேவைதானா உந்தன் பொன் மேனியில்
தள்ளிப் போடா வேணாம்.
வேணும் வேணும்
தள்ளிப் போடா போடா காதல் வந்து முடிக்கின்ற இடத்தில்
இடத்தில்
காமம் மெல்ல ஆரம்பம் காமம் வந்து முடிக்கின்ற இடத்தில்
இடத்தில்
காதல் மீண்டும் தோன்றும்
ஆசை வந்து வழிகின்ற இடத்தில் கூச்சல் போட சந்தோஷம்
ஆடை வந்து நழுவிடும் இடுப்பில் மௌனம் தானே பேசும்
மெத்தை கூட இந்த நேரம் மூச்சுதான் வாங்குது
தேகத்துக்கு தேகம் தானே போர்வை மாறுது
( நீ கவிதை எனக்கு )