நானும் உன்னில் பாதி
நீயும் என்னில் பாதி
ஒன்றில் ஒன்றாய் கலப்போம்
இந்த உலகினை மறப்போம்
ஆசை வந்தது இயற்கை
ஆடை வந்தது செயற்கை
யாகம் யாகம் காம தேவ யாகம்
யோகம் யோகம் பூர்வ ஜென்ம யோகம்
அச்சம் வந்தால் தொடாதே
ஆசை வந்தால் விடாதே
அழகெல்லாம் உனதாக நான் கொடுக்கிறேன்
ப்ரஹ்ம்மன் என்னை படைச்சான்
கமண்டலத்தில் எடுத்தான்
மஹராசி முகராசி உனை சொக்க வைக்குமே
நானும் உன்னில் பாதி
நீயும் என்னில் பாதி
இரவெல்லாம் தூங்காமல்
இரவெல்லாம் தூங்காமல்
தவம் இருப்பேன்
யார் வந்து கேட்டாலும்
வரம் கொடுப்பேன்
ஆடைக்கு விடைகொடு
ஆசைக்கு விலைகொடு
என் வாழ்க்கை என்னோடு
யாரும் இல்லை கேட்பதற்கு
சுகம் சுதந்திரமே.
போதாது போதாது
ஏக்கத்தில் நானிங்கு தவிப்பதென்ன
உன் உள்ளம் தாங்காமல் துடிப்பதென்ன
கட்டிக்கொள் ஒட்டிக்கொள்
கஜிராஹோ சிற்பம் போல் பசி தாகம் தெரியாமல்
நாம் கலந்திருப்போம்
நானும் உன்னில் பாதி
நீயும் என்னில் பாதி
ஒன்றில் ஒன்றாய் கலப்போம்
இந்த உலகினை மறப்போம்
ஆசை வந்தது இயற்கை
ஆடை வந்தது செயற்கை
யாகம் யாகம் காம தேவ யாகம்
யோகம் யோகம் பூர்வ ஜென்ம யோகம்
அச்சம் வந்தால் தொடாதே
ஆசை வந்தால் விடாதே
அழகெல்லாம் உனதாக நான் கொடுக்கிறேன்
ப்ரஹ்ம்மன் என்னை படைச்சான்
கமண்டலத்தில் எடுத்தான்
மஹராசி முகராசி உனை சொக்க வைக்குமே
நானும் உன்னில் பாதி