இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன
உயிரே உன் இதயம் என்னிடத்தில் வந்ததென்ன
உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே
இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே
அடி என்ன இது என்ன மாயம்
நீ தொட்ட பின்னே இல்லை காயம்
இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன
காதல் அது பெண்ணே நூலகம்
கண் இமைகள் ரெண்டும் புத்தகம்
திறந்தேன் படித்தேன் கவிதைகள் உன்னுள் ஆயிரம்
என்னை நான் மறந்தேன்
வின்னிலே பறந்தேன்
என்னை அள்ளி தந்தேன் உன்னிடம்
ஒஹ் ஏதும் இல்லை பெண்ணே என்னிடம்
அடி என்ன இது என்ன மாயம்
நீ தொட்ட பின்னே இல்லை காயம்
இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன
உதிரத்தில் காதல் வந்ததே
உறக்கத்தில் உன் பேர் சொன்னதே
அடடா உயிரில் மழை வெயில் ரெண்டும் தந்ததே
எதயோ இழந்தேன்
எதயோ அடைந்தேன்
வேறு என்ன கேட்பேன் உன்னிடம்
உன் நெஞ்சுக்குள்ளே வேண்டும் ஓரிடம்
அடி என்ன இது என்ன மாயம்
நீ தொட்ட பின்னே இல்லை காயம்
இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன
உயிரே உன் இதயம் என்னிடத்தில் வந்ததென்ன
உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே
இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே
அடி என்ன இது என்ன மாயம்
நீ தொட்ட பின்னே இல்லை காயம்