சாடின் பூவின் வாசம் கண்டேன்
ஊதா வண்ண சாடின் பூ
என் ஊருக்குளே நுழைந்தென்னை
மயக்கி விட்டால்
இதயத்தை சில நொடி நிறுத்தியே
மறுபடி இயக்கி விட்டாள்
யாரோ யார் அவள்
யாரோ யார் அவள்
ஆர் யூ ரெடி, கம் ஆன் சிங்க் வித் மீ
யாரோ யார் அவள்
யாரோ யார் அவள்
கஷ்மீரி தேனா
மும்பை பெண் மானா
கொல்கத்தா மீன
டெல்லி பெண் தானா
என் தோழன் என்னை கேட்டானே
இல்லை என்றே நான் சொன்னேனே
ஐயோ தமிழ் உரைத்தாள்
என் நெஞ்சையே பறித்தாள்
யாரோ யாரோ யாரோ யாரோ
யார் அவள்
மனதில் வாளை வாளை எரிகிறாள்
ரசிக்கிறாள்
அழகி யாரோ யார் அவள்
அழகி யாரோ யார் அவள்
அறையில் தேடினேன்
யார் உந்தன் தேவதை
அழகின் உச்சமாய்
யார் அந்த தாரகை
யாரோ யாரோ அவள்
யாரோ யாரோ அவள்
உனது கண்ணால் நீயும் தேடினால்
கிடைக்கமாட்டாள் ஏனோ கூறடி
உனக்கு யாரோ யார் அவள்
எனக்கு யாரோ யார் அவள்
யார் போலே சாய
உன் போலே கொஞ்சம்
ஏன் இந்த வெட்கம்
காணோமே நெஞ்சம்
அவளின் பேர் என்ன?
என்னை ஏன் கேட்கிறாய்
அவளின் எண் என்ன/
என்னை ஏன் பார்க்கிறாய்
யாரோ யாரோ அவள்
யாரோ யாரோ அவள்
விடையை அறிந்தும் என்னை சீண்டினாள்
தமிழில் என்னை பாட தூண்டினாள்
முறைத்து நின்றால் யார் அவள்
மனதை வென்றாள் யார் அவள்