You are here

Vaanga maccaan vaanga

Title (Indic)
வாங்க மச்சான் வாங்க
Work
Year
Language
Credits
Role Artist
Music G. Ramanathan
Performer P. Leela
T.M. Soundarajan
Writer Kannadasan

Lyrics

Tamil

வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்

வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே

ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க

மானைத் தேடித் தாங்க கண் வலையைப் போடுறீங்க தம்பி, அக்கா
மானைத் தேடித் தாங்க கண் வலையைப் போடுறீங்க
மந்திரத்தால் நாங்க இங்கே மசியமாட்டோம் போங்க போங்க
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்

உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம்

உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்

கற்பனையாப் பேசிப் பேசிக் கஞ்சித் தொட்டியில் வீழ்ந்தானாம்

கதையைப் போல ஆள மிரட்டிக் காளை போலத் துள்ளாதீங்க

வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்

முத்துப் போல் பல்லழகி முங்கோபச் சொல்லலழகி
கத்தி போல் கண்ணழகி கனிவான பெண்ணழகி
தேடி வந்தேனே புள்ளி மானே
தேடி வந்தேனே புள்ளி மானே ஓடி வந்ததால் இங்குதனே நானே

தேனுலாவும் பூங்காவனமதில் தானுலாவும் கலைமானை நானே

கோடி நமஸ்காரமே கோடி நமஸ்காரமே கோரினேன் இந்நேரமே
கோடி நமஸ்காரமே கோரினேன் இந்நேரமே
ஜாடையாய் என் கணைதனைத் தவறிய
ஜாதி மானை மறைப்பது முறையல்ல
தேடி வந்தேனே புள்ளி மானே
ஜாடையாய் என் கணைதனைத் தவறிய
ஜாதி மானை மறைப்பது முறையல்ல
தேடி வந்தேனே புள்ளி மானே

வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க

வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா

வலையை வீசி நீங்க தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா
வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க

பாங்கிமார்கள் நாங்க கண் பார்த்திருக்க நீங்க
பாங்கிமார்கள் நாங்க கண் பார்த்திருக்க நீங்க உங்க
பவுசைக் காட்டி ஆளை மயக்கி சிறையும் எடுத்திட்டீங்க
பவுசைக் காட்டி ஆளை மயக்கி சிறையும் எடுத்திட்டீங்க
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா
வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க

English

vāṅga maccāṉ vāṅga vanda vaḻiyaip pāttup poṅk

vāṅga maccāṉ summā vāṅga maccāṉ kiṭṭe

eṅgi eṅgi nīṅga eṉ ippaḍip pākkuṟīṅga

māṉait teḍit tāṅga kaṇ valaiyaip poḍuṟīṅga tambi, akkā
māṉait teḍit tāṅga kaṇ valaiyaip poḍuṟīṅga
mandirattāl nāṅga iṅge masiyamāṭṭom poṅga poṅga
vāṅga maccāṉ summā vāṅga maccāṉ kiṭṭe
vāṅga maccāṉ vāṅga vanda vaḻiyaip pāttup poṅk

uppillāda pattiyakkāraṉ ūṟugāyaip pāttāṉām

udaṭṭāle sappuk kŏṭṭi ondi pola niṉṉāṉām

kaṟpaṉaiyāp pesip pesik kañjit tŏṭṭiyil vīḻndāṉām

kadaiyaip pola āḽa miraṭṭik kāḽai polat tuḽḽādīṅga

vāṅga maccāṉ summā vāṅga maccāṉ kiṭṭe
vāṅga maccāṉ vāṅga vanda vaḻiyaip pāttup poṅk
eṅgi eṅgi nīṅga eṉ ippaḍip pākkuṟīṅga
eṅgi eṅgi nīṅga eṉ ippaḍip pākkuṟīṅga
vāṅga maccāṉ vāṅga vanda vaḻiyaip pāttup poṅk

muttup pol pallaḻagi muṅgobac cŏllalaḻagi
katti pol kaṇṇaḻagi kaṉivāṉa pĕṇṇaḻagi
teḍi vandeṉe puḽḽi māṉe
teḍi vandeṉe puḽḽi māṉe oḍi vandadāl iṅgudaṉe nāṉe

teṉulāvum pūṅgāvaṉamadil tāṉulāvum kalaimāṉai nāṉe

koḍi namaskārame koḍi namaskārame koriṉeṉ innerame
koḍi namaskārame koriṉeṉ innerame
jāḍaiyāy ĕṉ kaṇaidaṉait tavaṟiya
jādi māṉai maṟaippadu muṟaiyalla
teḍi vandeṉe puḽḽi māṉe
jāḍaiyāy ĕṉ kaṇaidaṉait tavaṟiya
jādi māṉai maṟaippadu muṟaiyalla
teḍi vandeṉe puḽḽi māṉe

vāṅga maccāṉ vāṅga sŏnda vaḻiyaip pāttuṭṭīṅga

vāṅga maccāṉ summā vāṅga maccāṉ jorā

valaiyai vīsi nīṅga taṅgac cilaiyaip puḍicciṭṭīṅga
vāṅga maccāṉ summā vāṅga maccāṉ jorā
vāṅga maccāṉ vāṅga sŏnda vaḻiyaip pāttuṭṭīṅga

pāṅgimārgaḽ nāṅga kaṇ pārttirukka nīṅga
pāṅgimārgaḽ nāṅga kaṇ pārttirukka nīṅga uṅga
pavusaik kāṭṭi āḽai mayakki siṟaiyum ĕḍuttiṭṭīṅga

Lyrics search