செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
நமது சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே கடமையோடு உயிரெனக் காவாயோ?
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
அன்பு நெறியிலே அரசாள
இந்த அகிலமெல்லாம் தமிழர் உறவாட
துன்பங்கள் யாவும் பறந்தோட
தூய மனம் கொண்டு கவி பாட
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ