ஹே அங்க என்ன பண்ற
நான் தூங்க போறேன்
நீ இன்னும் தூங்கலயா
அங்கே இப்போ என்ன செய்கிறாய்
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஹோ…
என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ துழாவி பார்க்க தோன்றுதே
ஓ ஓ….
அங்கே இப்போ என்ன செய்கிறாய்
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஹோ…
விரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே
பதில் ஒளி வரும் வரை படும் வலி சுகமே
ஓய்வில்லையே விரல்களுக்கு நோகின்றதே நக இடுக்கு
ஆனாலும் ஏன் சுகம் இருக்கு நெஞ்சே சொல்
ஓ ஓ….
நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு
கரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு
நான் கலையில் எழுந்ததுமே தானாகவே தலை திரும்பும்
உன் செய்தியை மனம் விரும்பும் ஏனோ ஏன்
ஓ ஓ….
அங்கே இப்போ என்ன செய்கிறாய்
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஹோ…
என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ துழாவி பார்க்க தோன்றுதே
ஓ ஓ….