அலைபாயும் பார்வை ஒன்று கொலுசில்லா கால்கள் ரெண்டு
உராசாத தோல்கள் கொண்டு என்னை கொல்லுதே
முதல் நாளில் ஏதோ ஏதோ பேச பேச தோன்றும்
முடியாமல் திக்கி திக்கி வார்த்தை போய் வரும்
முகமெல்லாம் வேர்வை மொட்டு எட்டி எட்டி பார்க்கும்
முதல் காதல் என்றால் இதுதான் நேரும்
முன்பின் நான் உன்போல் ஒரு பெண்ணோடு
ஒன்றாகவே எங்கேயும் சென்றெனில்லை அறிவாய்
கண் பார்த்து நான் பேசனும்
கை கோர்த்து உலாவனும்
என் தொழில் நீ சாயனும் அழகே
அணியும் உடையில் தடவும் வாசம்
என்மேல் படும் தூரம்தான் என்று
உனக்கும் மனதில் சலனம் வருதா
வரணும் எனில் நானும் என்ன செய்யனும்
கண்மேலே கலாபமோ என்மேலே உலவுமோ
ஏன் இந்த பெண் மோகமோ எனக்கு
நீ நிற்கும் தராசிலே நான் வைத்தேன் நிலாவினை
நீ கீழே நிலா அது மேலே
சிரிக்கும் அழகில் சிதறும் இதயம்
கனகாம்பரமாக காற்றில் ஆடும் கை
புருவம் இரண்டும் வளையும் இடத்தில்
புததயால் இருந்தாலும் பொய் இல்லை
அலைபாயும் பார்வை ஒன்று கொலுசில்லா கால்கள் ரெண்டு
உராசாத தோல்கள் கொண்டு என்னை கொல்லுதே
முதல் நாளில் ஏதோ ஏதோ பேச பேச தோன்றும்
முடியாமல் திக்கி திக்கி வார்த்தை போய் வரும்
முகமெல்லாம் வேர்வை மொட்டு எட்டி எட்டி பார்க்கும்
முதல் காதல் என்றால் இதுதான் நேரும்