நாம் ஒன்று சேரும் நேரம்
புது சக்தி வந்து சேரும்
இனி அத்தனையும் மாறும்
ஒன்றாய் ஒன்றாய் ஒன்றாய்
நாம் சேரும் இந்த நேரம்
எங்கள் மூச்சில் பெருகும்
அந்தச் சூட்டில் இந்த பூமி உருகும்
உண்மை தட்டிக் கேட்க வந்தோம்
கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம்
நீ எங்கோ நான் எங்கோ
ஒன்றாக சிந்தித்தோம் அன்று
தோழியே என் தோழனே!
நீ எங்கோ நான் எங்கோ
கோபத்தை சேமித்தோம் அன்று
தோழியே என் தோழனே!
எண்ணங்கள் ஒன்றாகி
கோபங்கள் சேர்ந்தாச்சு இன்று
தோழியே என் தோழனே!
அட பனிப் பனித் துளியெல்லாம்
திரண்டிடும் போதும்
அலை உருண்டிடும் போதும்
அதில் பயன் ஒன்று ஏது?
மலை என எழும் அலை
அடித்திடும் வரை
அக் கல்லில் செய்த
நெஞ்சம் ஒன்றும் நகர்வதில்லை
அட தனித் தனிப் பொறிகளும்
இணைந்திடும் போதும்
ஒளி தெரிந்திடும் போதும்
ஒரு வழி மட்டும் காட்டிவிட்டு
அடங்கிடுமா?
ஹே அணைந்திடுமா?
ஒரு தீப்பிழம்பாய் நாம் கிளம்ப ஒன்றாவோம்!
ஊருக்கு ஒன்றென்றால்
நாம் என்ன செய்வது என்று
ஓடினோம் அன்று ஓடினோம்
உண்மைக்குப் பக்கத்தில்
தோளோடு தோள் நின்று இன்று
தேடினோம் பதில் தேடினோம்
வெறும் அரட்டைக்குப் பயன்பட்ட
இணையத்துத் தளம்
இன்று புரட்சியின் களம்
அதில் விதை ஒன்று போட்டால்
முளைத்திடும் காடு
அதன் பரவலைப் பாரு
இதைத் தடுத்திட
ஒருவனும் இங்கில்லை
வெறும் திரையறை கடற்கரை
என இருந்தோமே
எங்கள் பொருள் மறந்தோமே
எங்கள் திறம் என்ன நிறம் என்ன
தெளிவடைந்தோம்
இன்று கடல் கடைந்தோம்
அட கிடைப்பது
என்னவென்று காண்போமே....