காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன?
வேறெதோ தேடிச் செல்லும் நெஞ்சில்
நேர்ந்திடும் இந்த மாற்றம் என்ன?
மனமே!
மனமே!
எதிர்பார்க்காத திசையினில்
திரும்புதல் முறையா?
மனமே!
மனமே!
எனை கேட்காமல்
இவனிடம் சரிவது சரியா?
மெதுவாய் வானேற யோசிக்கும்
இறகாய் ஆனேனே பார்த்தாயா?
இவள்தான் என் நெஞ்சம்
தேடி வந்த முகவரியா?
இவளருகில் நடக்கும் நொடிகளை
இழுத்துவிட இதயம் முயல்வதேன்?
வாய்பேசும் உளறலின் குவியலில்
வாய்க்கின்ற கவிதைகள் ரசிப்பதேன்?
இவள் விழிகள் திரும்பும் திசைகளில்
எனது நிழல் நிறுவப் பார்க்கிறேன்?
ஹே விழுங்கிடும் மொழிகளில்
அழுந்திடும் மனம்,
என் விழிகளில் விரல்களில்
வெளிப்படும் தினம்
தூங்காமலே -
என் இரவுகள் கரைகையில் இவளது
நினைவினில் புரள்கிறேன்!
என்னாகிறேன்? இது போதையா?
புதிதாய் தீயேற யோசிக்கும்
திரியாய் ஆனேனே பார்த்தாயா?
இவள்தான் என் நெஞ்சம்
தேடி வந்த முகவரியா?