ஏட்டி எங்க போற ஏதோ சொல்லி போற
ஆசை வெச்சா என்ன எப்போ பாரு தள்ளி போற
நீ தான் மிஞ்சி போற வேணாம் கெஞ்ச போற
தாலி தந்த பின்னு சொல்லு என்ன பண்ண போற
மானே நீ தான் அஞ்ச போற
மார்பில் சாஞ்சு கொஞ்ச போற
வேணா நீ தான் சிக்க போற
வீரம் தேஞ்சு சொக்க போற
ஏட்டி எங்க போற ஏதோ சொல்லி போற
ஆசை வெச்சா என்ன எப்போ பாரு தள்ளி போற
வெள்ளாடு போல தானே இருந்தேனே நானும் முன்ன
காங்கேயம் காள போல என்ன நீயும் மாத்திட்ட
ஒரு பார்வை என்ன பார்த்து உசுரோட என்ன கொன்ன
ஆகாரத்த மறந்தேனே உன் அன்பில் நானே
கண் தூக்கத்த தொறந்தேன்
எதற்காக வாழ்க்கை என்று எனக்குள்ளே கேள்வி ஒன்று
உனக்காக தானே வாழ்க்கை என்று சொல்வேன் இன்று
உன் மேல வெச்ச ஆசை ஒரு நாளில் வந்ததில்ல
ஈரேழு ஜென்மம் செஞ்ச தவமென்று சொல்வேன் புள்ள
எனை காக்கும் வரம் நீயே உணர்ந்தேனே மெல்ல மெல்ல
தெய்வீகத்த அறியேன் உன் கண்ணுக்குள்ள
பூர்வீகத்த அறிந்தேன்
உன போல யாரும் இல்ல இருந்தாலும் தேவை இல்ல
மனசோட நீயும் தங்கி போக சாவே இல்ல
ஏட்டி எங்க போற ஏதோ சொல்லி போற
ஆசை வெச்சா என்ன எப்போ பாரு தள்ளி போற