நாணன நாணன நாணனனா நா நா
நாணன நாணன நாணனனா நா நா
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
வேண்டுவது யாரோ யாரோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
ஓஹோ தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
கள்ள சிரிப்பொன்று வந்து நிற்க சொல்கின்றது
நிற்கவா போகவா கேட்குதே பாதங்கள்
ஆடவா பாடவா ஏனிந்த தாபங்கள்
ஓடும் நதி நீர் மேலே ஓடும் ஒரு பூ போலே
ஓடுதே என் நெஞ்சம் ஏனோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
ஏஹே கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
காற்றில் கேட்காத பாடல் காதில் கேட்கின்றது
தாவரம் போல நான் தனிமையில் வாழ்ந்தேனே
பறவையின் குரலிலே கலவரம் ஆனேனே
தேடல் இங்கு ஓர் இன்பம் தேடுவது தான் துன்பம்
தேட வைத்தது யாரோ யாரோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
வேண்டுவது யாரோ யாரோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு