ஆண்: நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னைச் சுற்றும் காதல் கொடி நீ
பெண் : நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னைச் சுற்றும் காதல் கொடி நான்
ஆண்: நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
பெண் : நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்
ஆண்: உன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா
பெண் : உன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா
ஆண்: உள்ளத்தில் கூச்சல் நீ
உள்ளுக்குள் காய்ச்சல் நீ
இரத்தத்தில் காதல் நீச்சல் நீ
பெண் : மின்மினி கூட்டம் நீ
வெண்பனி கூட்டம் நீ
மாங்கனி தோட்டம் நீதானே
நீதான் நிலவு பெத்த மகள்
பெண் : நீ இந்த நிலவின் அத்தை மகன்
ஆண்: முந்தானை வீடு மூங்கில் காடு
பத்து விரலாலே தீ மூட்டுவேன்
பெண் : ஏன் இந்த வேகம் வேணாம் மோகம்
காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்
பெண் : மன்மத அம்பு நீ
முறுக்கிய நரம்பு நீ
இரவினில் வம்பு தும்பு நீ
ஆண்: வண்ணத்துப்பூச்சி நீ
கண்களில் பேச்சு நீ
காதல் சாட்சி என்றும் நீ
நாந்தான் முரட்டு ஜல்லிக்கட்டு
பெண் : நான் உந்தன் பசிக்கு புல்லுக்கட்டு
ஆண்: கைநீட்டும் தூரம் காட்சி மாறும்
போர்வை கண்டாலே போதை ஏறும்
பெண் : உன் பின்னே என்றும் ரோஜா கூட்டம்
நானோ உன் கையில் பொம்மலாட்டம்
ஆண்: நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னைச் சுற்றும் காதல் கொடி நீ
பெண் : நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னைச் சுற்றும் காதல் கொடி நான்
ஆண்: நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
பெண் : நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்
ஆண்: என் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்ட்டாதே எனக்கு டாட்டா
பெண் : உன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்ட்டாதே எனக்கு டாட்டா