இது நீச்சல் போட்டு வந்த.. எங்கள் வீட்டுப்பிள்ளை
வெற்றி என்னும் சொல்லை.. இவன் விட்டு வைத்ததில்லை
குளிரும் பனிமலை.. குமுரும் எரிமலை.. ரெண்டும் கலந்த இதயம்
ஏழை எங்கள் வாழ்வில்.. இவனே காலை உதயம்
வெற்றி கொடி ஏத்து.. வீசும் நம்மக்காத்து
வருங்காலம் நம்ம கையில் தாண்டா
கட்டுமரம் போல.. ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும்மில்லடா
ஒரு தாய் மக்கள் ஒன்றாய் என்றும் நிற்க வேண்டும்
நாளை உலகம் நம்மை பார்த்து கற்க வேண்டும்
ஈர்க்குச்சி என்று நம்மை என்னும் பேர்க்கு
தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு
காக்கைக்கெல்லாம் கூடுண்டு. இங்கு ஏது.. ஏழைக்கொரு வீடு
காற்றை கேட்டால் கூறாதோ.. இங்கு நாளும்.. நம்ம படும் பாடு
சிரிக்கும் சந்தோஷங்கள் வந்தே தீரும்.. சாதிக்கும் கைகள் சேர்ந்தால்
பிறர்க்காக வாழும் நெஞ்சம்.. தனக்காக வாழும் கொஞ்சம்
எனக்கந்த நெஞ்சத்தை தேவன் தந்தானே
உனக்குள்ளே என்னை விதைப்பேன்.. எனக்குள்ளே உன்னை வளர்த்தேன்
ஹே ஹே ஹே உனைப்போல என்னை நினைத்தேன்
உனக்கென்று என்னை தந்தேன் கொண்டு போடா
வெற்றி கொடி ஏத்து.. வீசும் நம்மக்காத்து
வருங்காலம் நம்ம கையில் தாண்டா
ஹே கட்டுமரம் போல.. ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும்மில்லடா
நானும் நீயும் முயன்றால்.. சுத்தமாகும்.. நம்முடைய நாடு
உனக்கொரு மாளிகை கட்டி பார்க்க.. நமை விட்டா யாரு
என்னோடு வீரம் ஈரம் உள்ள பேர்கள்.. பின்னோடு வந்தால் போதும்
புது பாதை போட்டு வைப்போம்.. பொய்மைக்கு வேட்டு வைப்போம்
ஏனென்ற கேள்வியை கேட்டு வைப்போம்டா
இருந்தாக்கா தென்றல் காற்று தான்.. எழுந்தாக்கா சூறை காற்று தான்
ஹே ஹே ஹே பிறந்தாச்சு நல்ல வேளை தான்
இனி நம்ம காட்டில் என்றும் அட மழை தான்
ஹே வெற்றி கொடி ஏத்து.. வீசும் நம்மக்காத்து
வருங்காலம் நம்ம கையில் தாண்டா
ஹே கட்டுமரம் போல.. ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும்மில்லடா