பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் பதறுமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ வவ்வல் வவ்வல்
ஹோ.. ஆ..ஆ..ஆ..
ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்
பூவுக்குள் குளிப்பீரா ஆ..(புன்னகைப் பேரரசே)
விடியும்வரை மார்புக்குள் இருப்பீரா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா
ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்
செயல்புயல் நானடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
பூம்பாவாய்..
பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்
அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ
வாஜி.வா வா வா வா..
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....