சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு
எதுவும் முடியும் என்றே சிகரம் தொடு
வெற்றி என்பது ஒன்றே சிகரம் தொடு
நாளை வேண்டாம் இன்றே சிகரம் தொடு
வீழ்ந்து மீண்டும் நின்றே சிகரம் தொடு
இன்றுதான் நல்ல நாள் என்றிடு
உன் ஜாதகம் கிழித்து சிகரம் தொடு
உன் ஜாதியை அழித்தே சிகரம் தொடு
ஒரு நிமிடத்தில் அறுபது சிகரம் தொடு
சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு
சாலையில் அழுக்கை கண்டாலோ அதை அப்புறப்படுத்தி சிகரம் தொடு
உன் மூளையில் அழுக்கை பார்த்தாலோ அதை எறிந்து சிகரம் தொடு
யோ பெட்ரோல் காற்று வேண்டாமே நீ கொஞ்சம் நடந்து சிகரம் தொடு
அட பிளாஸ்டிக் குப்பைகள் வேண்டாமே நீ காகித பையில் சிகரம் தொடு
கணினி சிறை விட்டு பறந்தே சிகரம் தொடு
கடைசி சிகரெட்டை துறந்தே சிகரம் தொடு
கடந்த காதலை மறந்தே சிகரம் தொடு
கனவின் கதவுகள் திறந்தே சிகரம் தொடு
மாற்றமே நீயென மாறிடு
உனக்குள்ளே சென்று சிகரம் தொடு
உனை நீயே வென்று சிகரம் தொடு
இந்த உலகமே உனையினி வணங்கிடும் சிகரம் தொடு
சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு
இந்த உலகத்தை மாதத்தின பின்னாடி உன் வீட்டை நீ மாத்திடு முன்னாடி
உன் ஊரு மாறும் பின்னே உன் மனச மாத்து நீ முன்னே
அட வெற்றி வரட்டுமே பின்னாடி நீ திட்டம் போடு முன்னாடி
மாலை வரட்டும் பின்னே நீ வேலை பாருடா முன்னே
சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு
சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு