மயில் தோகை கொண்ட
விசிரி தோழன் ஒருவன் மயங்கி விட்டானே
காதல் மதுவை அருந்தி
திரு கோயில் திபம் எனவே
தோழி கை தலம் பிடிக்க வந்தாளே
தீவில் ஒளியாய் பொருத்தி
கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்
மாயம் புரிந்தாய் காற்றாய் நிரைந்தாய்
உனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தால்
காதல் தடம் பதித்தால்
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
தானாய் வந்ததோரு நந்தவனம்
என் சொந்தவனம்
ஆ... நீ தான் காலம் எங்கும் என் வசந்தம்
ஒரு பொன் வசந்தம்
தேன் மழை பொழியவா
நான் அதில் நனையவா
உயிரே உயிரில் இணையவா
ரோஜா பூ ஒன்று ராஜா உன் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
காமன் கோயிலுக்குள் மோக மேதை
அதில் ரோஜா பூஜை
மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை
வேர்வையில் குளிக்கலாம்
பார்வையில் துடிக்கலாம்
உறவே இரவை படிக்கலாம்
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
தேகம் இரண்டும் ரகங்கள் இசைக்க
மேகம் சந்தங்கள் தூவும்
மாயம் புரிந்தாய்
காற்றை நிரைந்தாய்
உனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தால்
காதல் தடம் பதித்தால்