பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்
கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்
கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்
உம்மை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்
கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்