ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
வாலிபம் என்பது தோட்டம்
வண்ண மலர்களின் கூட்டம்
வாடிய பின்னே மலராது
கண்களில் பொங்கும் வெள்ளம்
கலகலவென்னும் உள்ளம்
அடங்கிய பின்னே ஆடாது
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ
அங்கங்கு செல்வோம் வா வா வா
இரவென்ற ஊரில் உறவென்ற தேரில்
துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா