சொல்லாமலே மனசுக்குள் வந்தாய்
சொல்லாமலே உயிருக்குள் சென்றாய்
சொல்லாமலே ஏதேதோ செய்தாயே
பட்டபகலில் ஒரு நிலவு நடந்து போச்சே
வெட்டவெளியில் என் இதயம் களவு போச்சே
விடையேதும் தெரியாமல் ஒரு விடுகதை தொடர்கிறதே
சொல்லாமலே சொல்லாமலே
சொல்லாமலே மனசுக்குள் வந்தாய்
சொல்லாமலே உயிருக்குள் சென்றாய்
சொல்லாமலே ஏதேதோ செய்தாயே யே யே யே
இரவில் என் தலையணை கூட கனவில் உன் பேரை சொல்லி
ஏக்கத்தில் ஏதோ உளருதே
நிறைகுடம் போலே நெஞ்சில் தலும்பிடும் உந்தன் நினைவு
தினம் என்னை கொல்லாமல் கொல்கிறதே
உயிரின் துளிகள் முழுதும் நிறைந்தாய்
அடி தேவதை தரிசனம் எப்போது தெரியலையே
சொல்லாமலே சொல்லாமலே
சொல்லாமலே மனசுக்குள் வந்தாய்
சொல்லாமலே உயிருக்குள் சென்றாய்
சொல்லாமலே ஏதேதோ செய்தாயே
மௌனங்கள் போதும் பெண்ணே சரணங்கள் வேண்டாம் கண்ணே
கவனத்தில் கொள்வாய் எனையே
ஒரே ஒரு வார்த்தை போதும் சின்னஞ்சிறு பார்வை போதும்
எந்நாளும் உன் பின்னாலே வருவேனே
பிறையில் மறைத்தாய் சிறையில் அடைத்தாய்
அடி காதலின் விடுதலை எப்போது தெரியலையே
சொல்லாமலே சொல்லாமலே
சொல்லாமலே மனசுக்குள் வந்தாய்
சொல்லாமலே உயிருக்குள் சென்றாய்
சொல்லாமலே ஏதேதோ செய்தாயே
பட்டபகலில் ஒரு நிலவு நடந்து போச்சே
வெட்டவெளியில் என் இதயம் களவு போச்சே
விடையேதும் தெரியாமல் ஒரு விடுகதை தொடர்கிறதே
சொல்லாமலே ம்ஹும்…