தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூல் எடுத்து
பூமியை கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா
காதல் ஒன்னும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை
இப்போ நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
தனன நன தானா நனா தனன நன தானா நனா
தனன நன தானா தானா தனன நன தானா தானா
தனன நன தானா நனா தனன நன தானா நனா
தனன நன தானா தானா தனன நன தானா தானா
நீயும் நானும் வெகு நேரம்
மனம் விட்டு பேசி சிரித்தாலும்
பிரியும் பொழுது சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதல் சொல்லுமடி
காதல் காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல் வளருமே
பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்தப்பின் ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆ.. இது கரெக்ட்
அது ஆயுள் முழுக்க கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுக்க கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்