தாயே உன்னை இத்தனை காலம் எப்படி பிரிந்து வாழ்ந்தேனோ
கால் பட்ட இடமெல்லாம் கருவறை போல தாங்கிக்கொண்டது நீதானோ
நீரும் நிழலும் உணவும் தந்து உயிரை காத்தாய் நீ
வேண்டாம் என்று என்னை நீயும் தள்ள மாட்டாய் நீ
மரம் செடி போல் மனிதனையும் வளர்த்து காத்தவள் நீதானே
ஐவகை நிலங்களை அங்கங்கள் ஆக்கி அழுக்களை கூட சுமக்கின்றாய்
கோல வடிவில் சுமைதாங்கியாகி ஒய்வே இன்றி சுற்றுகிறாய்
உன்னை விட்டால் வாழ்வெது
உன்னை போலே உறவேது
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இருந்தாலும் இறந்தாலும்
நிலையான சொந்தம் நீதானே
உன்னை இனியும் பிரியேனே
உன்னை இனியும் பிரியேனே