நட்பின் கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லிங்க
ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லிங்க
புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லிங்க
இன்றுதான் இவளை தான்
பண்டைக்கால பெண்ணாய்ப்பார்த்தேன்
காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி
நானே இன்று சிரித்தேன்
நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லீங்க
யாரும் இவளை காதல்செய்ய தூதனாய்
ஃபோன்கள் செய்தேனே
மெட்டுக்கட்டி தண்ணியடிச்ச அன்றுதான் பயந்துப்போனேனே
நல்லப்பிள்ளை போல் தான் வெளியில் தெரிஞ்சாளே
வாரம் மூன்று நாட்கள் நாங்கள் தேட்டரில் ஆஜரானோமே
இது போல ஏறாலம்தான்
நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லீங்க
உன்னை நானும் என்னை நீயும்
விட்டுத்தான் கொடுத்ததில்லையே
இன்றுவரையில் பிரிவு என்ற வார்த்தைதான்
நினைவில் இல்லையே
நட்பைத்தவிர நமக்குள் ஒன்றுமில்லதானே
உன்னைப்பெண்ணாய் என்னை ஆணாய்
நாமும் தான் பார்த்ததில்லையே
நாமென்றும் வேறில்லையே
நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லீங்க