தையாரே தையா ஹே
தையாரே தையா
கை வீசிப் போவோம் ஒரு கவிதை தான்
என் போல யாரோ
அட என்னது யாரோ
யார் பாடுவாரோ
என் அழகையே
மின்மினி சேர்த்து வைத்த
கொலுசு சிமிட்டி நடக்க வேண்டும்
கிளிகளின் கழுத்தில் உள்ள
வளையல் வாங்கி அணிய வேண்டும்
மேகமாய் இமைகள் வேண்டும்
மின்னலாய் கண்கள் வேண்டும்
உலகமே என் பார்வையே
ஒததையில் நான் போக
அதனை ஆண்களும் உத்துதான்
என்னழகை பார்க்க வேண்டும்
பார்த்தவர் யாவரும் ஏக்கத்தில் மூழ்கியே
தூக்கத்தில் என் பேரை சொல்ல வேண்டும்
சிலந்தியாய் வான் எங்கும்
வலையை கட்டி வாழ வேண்டும்
மலர்களாய் பூமி எங்கும்
வாச்ம் தூவி மலர வேண்டும்
விதைகளாய் புதைய வேண்டும்
மரங்களாய் உயர வேண்டும்
உலகமே என் தாய் மடி
தையாரே தையா ஹே
தையாரே தையா
கை வீசிப் போவோம் ஒரு கவிதை தான்
என் போல யாரோ
அட என்னது யாரோ
யார் பாடுவாரோ
என் அழகையே
இலைகளின் கைகளில் கை ரேகை உள்ளது
ஆயினும் கை ரேகை பார்த்ததில்லை
முட்களின் கூட்டிலே வாழ்கிற போதிலும்
காக்கைகள் காலணி கேட்டதில்லை
இயற்க்கையை ரெண்டு கண்ணில் எடுத்து பூட்டி
படுக்க வேண்டும்
படித்ததை நினைவு வைத்து
மனிதற்க்கெல்லாம் சொல்ல வேண்டும்
மலையைப் போல் தெறிக்க வேண்டும்
அருவியாய் குதிக்க வேண்டும்
நதியைப் போல் உண்டால்
ஓடியே ஏ ஏ ஏ
தையாரே தையா ஹே
தையாரே தையா
கை வீசிப் போவோம் ஒரு கவிதை தான்
என் போல யாரோ
அட என்னது யாரோ
யார் பாடுவாரோ
என் அழகையே
மின்மினி சேர்த்து வைத்த
கொலுசு சிமிட்டி நடக்க வேண்டும்
கிளிகளின் கழுத்தில் உள்ள
வளையல் வாங்கி அணிய வேண்டும்
மேகமாய் இமைகள் வேண்டும்
மின்னலாய் கண்கள் வேண்டும்
உலகமே என் பார்வையே