வையம்பட்டி... வாழ குட்டி...
தப்பட்டம் ஆடு வேசம் கட்டி
பாட்டு கட்டி நீ ஆடுன
மேகங்கள் போடும் ஆலங்கட்டி
மல மேல ஒழப்பு பள்ளத்தில் பொழப்பு
மல ஜாதி முன்னேறுமா முன்னேறுமா
பணக்கார கரண்டி
மழை எல்லாம் சொரண்டி
வன காடு பழுதாச்சு
அம்மா பலகாலமா
மலைக்கு போய் மொட்ட போடு
மலைக்கே மொட்ட பொட வேணா
மலையும் மரமும் நம்ம சாமி
கொண்டாடுங்க... கூத்தாடுங்க...
தாய் மாமன் காத்து தாய்பால் ஊத்து
உசுரு பொழைக்க இது போதும்
மும்மாரி கூட மோசம் செஞ்சாலும் கையே எதிர்க்கலாம்
தேகத்தில் வலுவுண்டு மானே
இங்க தினையோடு சாப்பாடு தேனே
மேகத்தின் போர்வைக்கு கீழே
நாங்க காதல் செய்வோம் களவும் செய்வோம்
புல்லோடு தூங்கும் பனி துளி சேர்த்து
சூரிய ஒளியை கோர்போமே
சந்தோசம் உண்டு
சாதிகள் இல்ல சமத்துவம் காண்போமே
தென் நாட்டு தாகம்
தீர்க்கும் தெய்வம்
மேற்க்கு தொடர்ச்சி மலை தானே...
மனுசனும் கடவுளும் தோன்றும் முன்னாலே
வாழ்ந்த மலை தானே
பறவை எச்சம் தான் காடு
எங்க பண்பாட்டில் காடே தான் வீடு
மரமொன்று மல மேல சான்சா நாங்க
தூக்கம் கெட்டு துக்கம் கேப்போம்
தான் வீட்டு மேல தீ வைக்கும் மனுசா
நம்மோட காட்ட அழிக்காதே
பேராசா புடிச்ச பேய் மனக் காரா
தாய் முலை அறுக்காதே
வையம்பட்டி வாழ குட்டி தப்பட்டம் ஆடு வேசம் கட்டி
பாட்டு கட்டி நீ ஆடுனா மேகங்கள் போடும் ஆலங்கட்டி
மல மேல ஒளைப்பு பள்ளத்தில் பொழப்பு
மல ஜாதி முன்னேறுமா முன்னேறுமா