அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா
கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா
ஊரோ உறவோ வறண்டே கெடக்கு
உசுரா நெனைக்க மழையும் இருக்கு
பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே
இவ சாமி சொல்லி வந்தவா
அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா
கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா
அவ என்ன தாயா நீ என்ன மகனா
அடட பாசம் துளிர் விடுமே
கருங்கல் இடுக்கில் காக்கை இட்ட
எச்சத்தில் ஆல மரமே வருமே
தேசம் விட்டு போகும் போதும்
வானம் என்ன நீளம் தான்
பாசம் உள்ள சேலையில் எல்லாம்
தாய் பாலின் வாசம் தான்
பாச முழுகயில் பாசம் இனிக்குதே
ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே
இடம் பொருள் ஏவல் அமைவதை பொறுத்தே
உறவும் பிரிவும் ஏற்படுமே
யாரும் அற்ற காதில் பேசு துணை யாரு
சிட்டு குருவி போதுமே
ஒத்த மரமாகி போன இது பொண்ணா பொம்பள
மகிழ்ந்து தான் பூத்து போனா
மகன் வந்த தெம்புல நஞ்சு போன
வாழ்க்கை சொந்தமே தேடுமே
பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே
அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா
கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா