பெண்: கற்பூர கன்னிகையே வாராய்
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வாங்கள மகராணியே... வலது காலையெடுத்து வாராய் நீயே
நீ வந்த இடம் வளமாக சென்ற இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக வாழப்போற...
(இசை...)
ஆண்: மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூரு போகாதடி தலையாட்டாம பொம்மை நிற்கும்
தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா அங்க மேகமுந்தான் சுத்தும்
குழு: அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா
அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா
பெண்: கற்பூர கன்னிகையே வாராய்
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வாங்கள மகராணியே... வலது காலையெடுத்து வாராய் நீயே..
குழு: அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காத
அத்தை மகன் வாரான்டி களைச்சுப் போக
ஆண்: மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..
குழு: சித்திரையினா வெயில் அடிக்கும் கார்த்திகையினா மழையடிக்கும்
அஜல் குஜால் அஜல் குஜால் மாப்பிள்ளைதான் தங்கம்
ஆடியின்னா காத்தடிக்கும் மார்கழின்னா
ஜமாய் ஜமாய் ஜமாய் ஜமாய் மாப்பிள்ளைதான் சிங்கம்
(இசை...)
ஆண்: ஓ... மருதானி தோட்டதுக்கே அட மருதானி யாரு வச்சா
ஹோ தேரா தேரா இவன் வாரான் வாரான் ஓ...
பெண்: ஹோ.. காட்டு குயிலு கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்திருச்சு
ஹோ ஜோரா ஜோரா வரும் வீரா வீரா
ஆண்: நா அக்கரையில் இருந்தாலும் இக்கரையில் இருந்தாலும்
சக்கரையா இருப்பானே ஆசையாலே
மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..
குழு: அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா
பெண்: மருமக மருமக வந்தாச்சிம்மா இனி மாமியாரு பதவிதான் உனக்காச்சம்மா
குழு: தமிழ்நாட்டு மன்மதனே வாராய் பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்
நீ இந்திர மகாராஜனே... வெற்றி மாலைக்கினே பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்திருச்சு கனவுத்தாட
(இசை...)
பெண்: ஓ... கெட்டிமேளம் நாதஸ்வரம் அது சேந்து கேட்கும் நேரம் சுகம்
டும் டும் டும் டும் டுடு டுடு டும் டும் டும் டும்
ஆண்: ஓ... மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு
பெண்: டும் டும் டும் டும்
ஆண்: டும் டும் டும் டுடும் டுடும் டும் டும் டும் டும்
பெண்: ஓ சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி
சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன...
ஆண்: மதுரைக்கு போகாதடி... அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்..
பெண்: மதுரைக்கு போக மாட்டேன்... என் மல்லிப்பூ உன் கையிலே..
ஆண்: தஞ்சாவூரு போகாதடி... தலையாட்டாம பொம்மை நிற்கும்..
பெண்: எங்கும் போகமாட்டேன் உன் முன்னாலதான் நிப்பேன்
முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சுத்த வைப்பேன்
குழு: அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா
அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா
அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா
அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா