ஆண்: காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை...
தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை...
காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை...
தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை...
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ....
(இசை...)
ஆண்: கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை
புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை
தேவை பூமியை தினமும் தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது... உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ....
(இசை...)
ஆண்: அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை
கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை
இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை
தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை
வாழும் மானிடரின் சுமைகள் தீராது
காலம் உறவுகளின் தீவு
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது... உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ.... (காதல் சிலுவையில்...)