வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
ஒரு சிலையின் காதில் நான் பாட அது உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜா பூக்கள் பூத்தாட
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
திரும்பும் எந்த திசையிலும் என் பாடல்கள் கேட்குமே
விரும்பும் நேயர் வரிசையிலே குயில்களும் சேருமே
உதிர்ந்து விழும் இலைகள் எல்லாம் என் பாடல்கள் கேட்டபடி
இலைகளுக்கே தெரிந்ததடி அந்த இயற்கையும் வியக்குதடி
பாலைவனங்களில் என் பாடல்கள் சோலையடி
மனசுக்கு மனசு பாலங்கள் போட பாட்டுக்கள் போதுமடி
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
வாசல் தேடி வந்ததடி சொர்கமே சொர்கமே
வானம் கூட தொட்டுவிடும் தூரமே தூரமே
கனவுகளின் பேரெழுதி ஒரு தேவதை வாங்கிக்கொண்டாள்
நிமிடத்துக்கு ஒன்று என அந்த கனவுகள் பலிக்க வைத்தாள்
கோயில் மணிகளே என்னை வாழ்த்திட ஒலி கொடுங்கள்
மெல்லிசை ராஜ்ஜியம் என் வசம் ஆனது பூமழை பொழிகிறது