காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
துள்ளி துளி ஓடலாம் மான்களாக ஆகலாம் பூவனங்கள் போகலாமா
முள்ளில்லாத பூக்களில் சுற்றுலாக்கள் போகவே வண்டு போல மாறலாமா
கோடை காலம் தீர்ந்தாச்சு சொகம் ஓடி போயாச்சு சொந்தங்கள் புதுசாச்சு
காட்டு மூங்கில் குழளாச்சு காற்றும் கூட சேர்ந்தாச்சு கற்பனை நிஜமாச்சு
ஒளிந்திருந்த புன்னகை இன்று ஒவ்வொரு நிமிஷமும் வெளியாச்சு
முகம் மறைத்த மேகங்கள் விலகி முழுமதி வெளியே வந்தாச்சு
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
வெண்புறாக்கள் கூட்டமே எங்களோடு கூட்டணி சேர்ந்துக்கொள்ள வேண்டுகின்றதே
வெட்டுகின்ற மின்னலோ சற்று நேரம் நின்றதே கையெழுத்து வாங்கி சென்றதே
பூமியெங்கும் வலைவீசு நம்மை போலே ஆளேது நினைத்தால் இனிக்கிறது
சொந்தமாக ஒரு வீடு நிலவில் வாங்கு என்னோடு சிறகுகள் முளைக்கவிடு
இமை இருக்கிற துணையில் தானே விழிகள் இங்கே இருக்கிறது
நிலமிருக்கிற துணையில் தானே வேர்கள் இங்கே வளர்கிறது
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை