நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்
நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
அது புரியாததா நான் அறியாததா
அது புரி....யாததா நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா
எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.
நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ...
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா