சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
எங்கே மாராப்பு.. மயிலே நீ போ வேணாம் வீராப்பு ..
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
கையே மாராப்பு .. வருவேன் நீ வா வேணா வீராப்பு..
நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால
வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தனா ஓடுவது
புது வெள்ளம் சேரும்போது
வழி என்ன பாதை என்ன
காற்றாகி வீசும் போது
தசை என்ன தேசம் என்ன
மனச தாழ் போட்டு
மயிலே நீ போ வேணாம் விளையாட்டு..
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
கையே மாராப்பு .. மயிலே நீ போ வேணாம் வீராப்பு..
என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல..
என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில..
நீ தந்த தாலி முடிஞ்சுவச்சேன்
உன்ன நம்பி தானே ஒளிச்சுவச்சேன்
பொல்லாப்பு வேணா புள்ள
பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்க பாயும் இல்ல
நீ வந்த நியாயம் இல்ல
வீணா கூப்பாடு வருவேன் நீ வா ரோசா பூ சூடு..
சின்ன பொண்ணு செல செண்பக பூ போல...