கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
என்னை நீ வெறுத்தால்
என்னாகும் என்று
நினைத்து தான் பாரு
நெஞ்சத்தை கேளு
முள்ளில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே...
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
ஆ..ஆ.ஆ...அமாவாசை இரவினிலே
நிலவது உதிப்பதில்லை
அழகற்ற என் முகத்தை
அன்றொருத்தி ஏற்கவில்லை
அழகை வைத்து காதலிக்க
அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க
என்னை போல சிலர் உண்டு
பாலைவனத்தில் சோலை எதற்கு
காளை மனதில் சோகம் எதற்கு
திரிந்திட்ட பால் குடத்தில்
வெண்ணை அதை தேடாதே
ஒரு தலை ராகத்திலே
காலந்தன்னை கழிக்காதே
அழகிய மயிலே என்னை நெருங்காதே
நெருங்காதே...
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டும் அங்கே பூப்பதில்லை
காதலித்து தோல்வியென்றால்
மீண்டும் அங்கே காதல் இல்லை
காளை உன்னை காம்பு என்றால்
பெண்ணவளை பூ என்பேன்
காம்பில் அவள் பூக்கவில்லை
காதல் அவள் ஏற்கவில்லை
நினைத்தது நான் நினைத்தது தான்
மறந்து விட்டால் மாற்றம் வரும்
நினைத்ததை மறப்பதற்கு
நெஞ்சத்துக்கு தெரியாதே
கண்களை மூடிக்கொண்டு
இருட்டென்று சொல்லாதே
முள்ளில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
தரை மீது ஓடம் ஓடாது மானே
நதி மீது தேரும் போகாது தேனே
மானே தேனே என்னை நெருங்காதே
நெருங்காதே...
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே