வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வளரும் தேயும் நிலவைப் போலே
வளரும் தேயும் நிலவைப் போலே
மறைவார் தன்னாலே
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
இரவும் பகலும் நிலைப்பதில்லை
அழகும் பொருளும் அது போலே
இரவும் பகலும் நிலைப்பதில்லை
அழகும் பொருளும் அது போலே
இளமைப் பருவம் காணும் கனவு
இருக்கும் வரையில் அழிவதில்லை
இருக்கும் வரையில் அழிவதில்லை
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
மரத்தில் இருக்கும் இலையுதிரும்
மறு படி துளிர்க்கும் காலம் வரும்
மரத்தில் இருக்கும் இலையுதிரும்
மறு படி துளிர்க்கும் காலம் வரும்
நல்ல மனிதரின் வாழ்விலும் துன்பம் வரும்
மறையும் மீண்டும் இன்பம் வரும்
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வளரும் தேயும் நிலவைப் போலே
வளரும் தேயும் நிலவைப் போலே
மறைவார் தன்னாலே
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்