ஓடி விளையாடு பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
பாலை பொழிந்து தரும் பாப்பா
அந்த பசு மிக நல்லதடி பாப்பா
பாலை பொழிந்து தரும் பாப்பா
அந்த பசு மிக நல்லதடி பாப்பா
வாலை குழைத்து வரும் நாய் தான்
அது மனிதர்க்கு தோழனடி பாப்பா
பொய் சொல்ல கூடாது பாப்பா
என்றும் புறம் சொல்லாகாது பாப்பா
பொய் சொல்ல கூடாது பாப்பா
தெய்வம் நமக்கு துணை பாப்பா
ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று பழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகைத் திரள்
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேளுடனே வருவாய்
தருவாய் நலமும் தாகமும் புகழும்
தவமும் திறமும் தனமும் கணமும்
முருகா முருகா முருகா
ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா
ஓடி விளையாடு பாப்பா