வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது
கந்தன் முருகன் கை வேலைக் கொடுத்தான்
கங்கை கொண்டவன் மான் தொலைக் கொடுத்தான்
அன்னை உமையாள் தமிழ்ப் பாலைக் கொடுத்தாள்
அல்லி மலர் போல் இந்த பிள்ளை பிறந்தான்
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது
அள்ளி அணைத்தால் அன்பு வெள்ளம் பெருகும்
அங்கம் முழுதும் தமிழ் சங்கம் முழங்கும்
பிஞ்சு முகத்தில் அன்னை நெஞ்சம் மயங்கும்
பிள்ளை சிரிப்பைக் கண்டு தெய்வம் வணங்கும்
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது