மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதாண்டி
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதாண்டி
ஆண்களுக்குள்ளே மான்களும் உண்டு
அடித்து தின்னும் புலிகளும் உண்டு
பெண்களுக்குள்ளே கிளிகளும் உண்டு
பெண் என பிறந்த பேய்களும் உண்டு.. உண்டு..
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதாண்டி
மக்களை ஒருவன் மதிப்பது கடமை
மக்கள் ஒருவனை மதிப்பது பெருமை
துணை இருந்தால்தான் வலிமையும் ஓங்கும்
துணை இல்லாவிடில் திறமையும் தூங்கும்.. தூங்கும்
தூங்கி விழுந்தவர் நாட்டுக்கு பாரம்
சும்மா இருப்பவர் வீட்டுக்கு பாரம்
வரவறியாமல் செலவிடும் மனிதன்
தாய்க்கும் பாரம் தனக்கும் பாரம்.. பாரம்
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதாண்டி