இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயறிலே என்னை தள்ளியதேன்
உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன்
நிழல் என தொடர்ந்தேன் அதை நீ அறிவாயோ?
நிழல் தர நீ இங்கு வருவாயோ?
பொன்னை போல் பூவை போல் உன்னை சூடி கொண்ட நான் இன்று வாடி கிடப்பதோ?
பிரிவிங்கே உண்மை தான் என்றால் உறவு என்னையா வாழ்வது கனவு பூமியா?
பாதைகள் இல்லை என்றால் பயணங்கள் போவதோ
நம் குற்றம் என்ன ஏதோ தெய்வத்தை நோவதோ
யாரிடம் என்ன சொல்வது இனி சேரும் இடம் இங்கு வேரேது
எங்கோ நீ இருக்கின்றாய் என்றே உள்ளம் சொல்லுதே அதில் என் உயிரும் உள்ளதே
கண்ணுக்குள் தூங்கிடும் கங்கை கன்னம் இறங்குதே அதுவும் உன்னை தேடுத்தே
நீ பார்த்த நிலவு இங்கே நீ எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால் வாழ்வேது நெஞ்சமே
கூவிடும் குயில் வாடுது ஒரு கூண்டு எங்கே இது நியாயமோ?...