காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சம் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்
நெஞ்சின் தாபம் ஏயும் ஏற்றும்
(காற்றில் எந்தன் கீதம்)
நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்
(காற்றில் எந்தன் கீதம்)