காதல் தந்த வலி தீரும் காதலினாலே
கண்ணீரோடு முத்தங்கள் கலந்ததினாலே
காயம் படும் வேளை காதல் மருந்தாகும்
காதல் மடி மீது உயிரும் புதிதாகும்
கந்தா உன் ஆலயம் கண்டதொரு புண்ணியம்
அபயம் அளித்திடும் அய்யனின் பொற்பதம்
வேடர்க்கு சிக்காத வெண்புறா ஜோடிக்கு
வேலேந்தி காவல் நீ காவல் தர வேண்டினோம்
நன்றே நீ செய்தாலும் கொன்றே நீ போட்டாலும்
ஒன்றே என் துணையென்று உனை தேடினோம்
சிறகோடு சிறு குஞ்சை அணைக்கின்ற கோழி
அது போல ஒரு காவல் தர வேண்டும் வா நீ
வெற்றி வேலடா இது வீர வேலடா
இந்த வேலை ஏந்தும் வேளை உன்னை வெல்பவன் யாரடா
வெற்றி கொள்ளடா பகை வேரை கில்லடா
உன் காதல் வீரம் ரெண்டும் வாழ வேங்கையாய் நில்லடா
மிதிபடும் நிலமென பொறுப்பதும் காதல்
எரிமலை நெருப்பென வெடிப்பதும் காதல்
பகைவனை எரித்திட ஒருமுறை வெடிப்பாயே
அழுவதும் தொழுவதும் கோழைகள் பழக்கம்
தமிழ் மகன் உடலுக்கு தழும்புகள் பழக்கம்
எதிரியின் முகத்தினில் உன் பெயர் பொரிப்பாயே
சிரித்தால் பகையே அவன் கேலி சுடவில்லையா
காதல் வெல்லும் நேரம் தான் இது இல்லையா
புதிதாய் நெருப்பே அதை காட்டி சுடும் இல்லையா
சொல்லு உந்தன் நெஞ்சுக்குள் நெருப்பில்லையா
உன் காதல் தேவதை யாசித்தாள் நீ உடலும் உயிரும் தந்துவிடு
ஒரு போரில் பகைவன் வேசித்தால் அவன் எலும்பை சுட்டுவிடு
ஜெயம் நிச்சயம்
நிச்சயம் நிச்சயம்
ஜெயம் நிச்சயம்
உன் ஜெயம் நிச்சயம்