ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்
ஓடத்தின் மேல நீயும்
பாடத்தைக் கேளு ராஜா
கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா
ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்
எல்லாத்தையும் ஆண்டவன் படச்சான்
எல்லாருக்கும் நிறங்கள கொடுத்தான்
வேண்டாதத ஜெயிலுல அடைச்சான்
ஆகாதத அழுத்தியும் புடிச்சான்
தப்பு செஞ்ச போது தண்டன தப்பாது
தீர்ப்பு ஒன்ன தேடி வந்தது இப்போது
ஆட்டுக் குட்டி ஆத்தத் தாண்டி
ஓடிப் போக முடியாது
வீட்டுக் கோழி பாட்டுப் பாடி
கால நேரம் விடியாது
சின்னப்பா ஏய் என்னப்பா நீ
உள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஹேய்
ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்
ஓடத்தின் மேல நீயும்
பாடத்தைக் கேளு ராஜா
கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா
ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்
வெள்ளாமைக்கு வேலியும் இருக்கு
வெள்ளாட்டுக்கு வேதனை எதுக்கு
எல்லாம் அந்த ஆண்டவன் பொறுப்பு
ஏமாந்ததும் ஏன் இந்த வெறுப்பு
கெட்டுப் போகும் போது கட்டுப்பாடு போடு
புத்தி சொல்லிப் பாத்தேன்
நானும் ரொம்ப நாளு
பாதை மாறும் கால்கள் எல்லாம்
ஊரு போயி சேராது
பாவம் பரிதாபம் பாத்தால்
ஒன்ன மாத்த முடியாது
சின்னப்பா ஏய் என்னப்பா நீ
உள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஹ
ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்
ஓடத்தின் மேல நீயும்
பாடத்தைக் கேளு ராஜா
கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா
ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம் ஹேய்