கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
(கண்மணி)
உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது
அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி