வாஞ்சை மிகுந்திட
ஆஞ்சை இடுகிறேன்
கொஞ்சம் பணிந்திடு - இனிவரும்
ஏல்வை முழுவதும்
சால்வை இவளெனத்
தோளில் அணிந்திடு
உனக்கென... உலகையே
உதறினேன் பார்த்திடு....
மாலை ரெண்டு மாற்றவில்லை
தாலி ஒன்றும் ஏற்றவில்லை
நீயும் நானும் ஒன்றாய் வாழ்கின்றோம்
ஊரைப் பார்க்கத் தோன்றவில்லை
நாளை மீதும் நாட்டம் இல்லை
அன்றில் போலே ஒன்றாய் வாழ்கின்றோம்
ரேகைகள் ரெண்டில் ரெக்கைகள் நெய்தோம்
பறக்க வானேறினோம்
பூமியைச் சுற்றி முடித்ததாலே
புதிய கோள் தேடி நீயும் நானும் புகுந்திட... (வாஞ்சை மிகுந்திட)
பாதை எங்கே போகுமென்றே
சாலைப் பூக்கள் கேட்பதில்லை
பூக்கள் போலே வாழ்க்கை கொள்வோமா?
பூவில் தோன்றும் வாசம் என்றும்
பாதை பார்த்துச் செல்வதில்லை
வாசம் போலே காற்றில் செல்வோமா?
உரிமை என்றே உடைமை என்றே
எனக்கு நீ தோன்றினாய்
இளமைக் காட்டின் செழுமை யாவும்
முழுமையாய் உந்தன் தலைமையில் திகழ்ந்திட...
(வாஞ்சை மிகுந்திட)