எடையில்லா கடவுள் துகளைப் போலே
மிதக்கின்றேன் வெள்ளை வண்ண வானத்திலே
தடையில்லா வழியில் பாயும் காற்றாய்
மனதுள்ளே கொள்ளை இன்பம் பாய்கிறதே
இனியேதும் அச்சங்கள் இல்லை
இனியேதும் துன்பங்கள் இங்கில்லை
முடிவில்லா காதல் மட்டும் தான்....
புன்னகைகள் நான் தேடுகிறேன்
உள்ளுக்குள்ளே அவை வைத்துக்கொண்டே
சொர்கங்களை நான் தேடுகிறேன்
என்னருகே உன்னை வைத்துக்கொண்டே
ஒட்டிக்கொண்டே பிறந்திடும் இரு பிள்ளைகளாய்
இன்பத்துடன் துன்பம் பிறக்கும்!
காதல் கொண்டே
இந்த காலம் என்ற கத்தியால்
துன்பத்தை வெட்டி எறிந்தோம்!
தெய்வங்களை நான் நம்புவதே
கண்ணில் உன்னை காணச் செய்ததற்கே
வேதியலை நான் நம்புவதே
உன்னை என்னை ஒன்று சேர்த்ததற்கே
முத்தந்தின்னி பறவை ஒன்றின்று என்னைச் சுற்றி
கொத்துதிங்கே என்ன செய்வேனோ?
வெட்கத்தினை
கேட்டு நச்சரித்து நிற்குதே
யாரோடு நியாயம் கேட்பேனோ?