அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே
நதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்
உறங்காத உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மை எழுதி
எனக்காக காத்திருந்தால் எண்ணி நானே மறந்தேனே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே
கனவோடு சில நாள் நனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
புல்லி போட்ட புல்லி போட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலக்காரி
நெல்லறுத்துப் போகையில் யார் கண்ணி எந்தன் காவலடி
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே