கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் நானும் வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிகக் கொடுமை
இளமையில் வறுமை
பசி தான் மிகப் பெரும் மிருகம்
அதை அடைக்க வழிகள் இங்கில்லையா
கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா ?
இது மாறுமா ?
எதையும் விற்கும் எந்திர உலகம்
எல்லாம் இங்கு உண்டு
மனிதன் மட்டும் தேடி பார்த்தும் எங்கும் இல்லை
கண்ணும் காதும் கையும் காலும்
இல்லா மனிதர் உண்டு
வாயும் வயிறும் இல்லா மனிதர் எப்பவும் இல்லை
மனிதன் எங்கும் கண்ணின் விதை
அள்ளித் தூவ கண் வேண்டும்
வருங்காலத்தில் வறுமை இல்லை உலகம் வேண்டும்
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் நானும் வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிகக் கொடுமை
இளமையில் வறுமை
பசி தான் மிகப் பெரும் மிருகம்
அதை அடைக்க வழிகள் இங்கில்லையா
கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா
இது மாறுமா?